மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன்.
ராஜ்யசபாவில் வைக இன்றைக்கு நாசீர் அகமதுவை தூக்கி எறிந்தீர்களே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இலட்சக்கணக்கான இசுலாமிய இளைஞர்கள் எரிமலையின் சீற்றமாகக் கிளம்பிவிட்டார்கள். அவர்களை எங்கே தூக்கி எறிவீர்கள். இரண்டு இலட்சம் படையினரைக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குவித்தபோதே நான் மனம் பதறினேன்.
காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாரதிய ஜனதா இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது.
இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும் என்று எதிர்ப்பவன் நான். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி என் இதயத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன். இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன்.
ராஜ்யசபாவில் வைகோ
இந்த வலைப்பதிவில் தேடு
மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். ராஜ்யசபாவில் வைகோ
ஜம்மு காஷ்மீர் குடியரசுத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில்
ஜம்மு காஷ்மீர் குடியரசுத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அதன் சட்ட சிறப்பம்சங்களை நீக்கி யூனியன் பிரதேசமாக மாற்றி, குடியரசுத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது ஆளும் பாஜக நடுவண் அரசு.
இதற்காக சொன்ன காரணங்கள், ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் ஒரு பயங்கரவாதத் தளமாகக் பயன்படுத்திக் கொண்டு இந்தியா மீது போர் தொடுத்துக் கொண்டே இருந்தது. அந்த பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியக் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்பதுதான்.
இது வெறுமனே மேலோட்டமாகப் பார்த்தால்…ஆமாம்ல, உண்மைதானே என்றே எண்ணத் தோன்றும்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது இந்திய ஒன்றியத்தோடு இறுதியாக இணைந்த ஒரு மாநிலம். இந்தியாவோடு இணைய ஒப்புதல் அளித்து அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் மிக முக்கியமானது, ஜம்மு காஷ்மீர் மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்கள் அசையாச் சொத்துக்களை அங்கே வாங்கக் கூடாது என்பதே.
இதை ஒப்புக்கொண்டே நடுவண் அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவோடு இணைத்தது. அந்த ஒப்பந்தத்தின் சான்றுகளே சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ.
இன்று, நடுவண் அரசு அந்தச் சட்டப்பிரிவுகளை நீக்கியது என்பது, முதலில் தான் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தையே நடுவண் அரசு தற்போது கிழித்தெறிந்துள்ளது என்பதே உண்மை.
அதாவது நம்பிக்கையோடு இந்தியாவுடன் தங்களை ஒப்படைத்துக் கொண்ட ஒரு மாநிலத்தையும், அதன் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, தனதாக்கிக் கொண்டுள்ளது நடுவண் அரசு. இது அப்பட்டமான ஒப்பந்த மீறல்.
சரி…பாகிஸ்தான் பயங்கரவாதம்?
ஜம்மு காஷ்மீர் என்பதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர். அடுத்தது, இந்திய எல்லையில் உள்ள தனி மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர்.
பாகிஸ்தான், தன் பயங்கரவாத முகாம்களை இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரில் வைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டை வைத்த இந்திய நடுவண் அரசுகள், அங்கே மக்களை பயங்கரவாதத்திற்கு எதிராக உருவாக்குவதற்குப் பதிலாக மக்களைத் தொடர்ந்து வாட்டி வதைத்ததுடன், இந்திய நடுவண் அரசு மீதான வெறுப்புணர்வையே தொடர்ந்து வளர்த்தெடுத்தன. சோதனைகள் என்கிற பேரிலும், பயங்கரவாத ஒழிப்பு என்கிற பேரிலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் முழு வெறுப்புக்கும் ஆளானது இந்திய நடுவண் அரசு.
எந்த ஒரு சாதாரண மக்களும் பயங்கரவாதத்தை விரும்பியதாக வரலாறு கிடையாது. பயங்கரவாதிகளிடம் இருந்து தங்களைக் காக்கும் ராணுவத்தை கடவுளர்களாக எண்ணுபவர்களே அவர்கள்.
ஆனால், இந்திய ராணுவத்தைக் கண்டாலே ஒவ்வொரு ஜம்மு காஷ்மீரியும் எதிரியைக் காண்பதைப்போல உணர்வுக்கு ஆளானதற்கு யார் காரணம்?
தமிழ் ஈழத்தில், அமைதி காக்கப்போகிறோம் என அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை மூன்றே மூன்று ஆண்டுகளில் எப்படி தமிழ் ஈழ மக்களிடையே, உலகத்தமிழர்களிடையே வெறுப்பைச் சம்பாதித்தோ, அதைவிடப் பலமடங்கு சுமார் 70 ஆண்டுகளாக, ஜம்மு காஷ்மீரில் மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கிறது இந்திய ராணுவமும், நடுவண் அரசும்.
ஜம்மு காஷ்மீரில் விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள், பயங்கரவாதிகளுக்குத் துணை போனவர்கள் என்று சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள் என எண்ணிலடங்காத் துன்பங்களை அனுபவித்த மக்களே அங்கே, பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் அளவுக்கு ஆளாகியதற்கு காரணம் நமது நடுவண் அரசுகள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
அதேபோல, தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற சிறப்பு சட்டப்பிரிவுச் சலுகைகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதும் ஜம்மு காஷ்மீர் அரசின், ஆட்சியாளர்களின், அரசியல் தலைவர்களின் தவறு.
சரி, யூனியன் பிரதேசமாகிவிட்டதால் தற்போது இந்திய ஆளுகைக்குட்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் உருவாகாமல் தடுத்துவிடலாம், ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறது நடுவண் அரசு?
பாகிஸ்தான் எல்லை என்பது ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்ல, குஜராத்திலும்கூட உள்ளது.
பயங்கரவாத ஊடுருவல் என்பது ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக மட்டுமல்ல இந்தியாவின் எந்த எல்லையில் இருந்தும் வர இயலாமல் நமது பாதுகாப்புப் படைகளால் தடுக்கப்படும்போது அது ஏன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இயலவில்லை?
Surgical Strike, Air Strike அடித்துப் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே சென்று துவம்சம் செய்யும் நமது இந்திய அரசுக்கு…ஒரு சிறு மாநிலத்தில் மக்களிடையே ஊடுருவும் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டுபிடித்துக் களையெடுப்பது என்ன அவ்வளவு கடினமானதா? அதுவும் 70 ஆண்டுகளாக???
இத்தனைக்கும் ஜம்மு காஷ்மீரின் மொத்த மக்கள் தொகையே வெறும் ஒன்னேகால் கோடிதான்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 130 கோடி.
எனவே, ஜம்மு காஷ்மீரில் பாஜக நடுவண் அரசுக்குப் பிரச்சனை, பயங்கரவாதம் மட்டுமே அல்ல.
- விஷ்வா விஸ்வநாத்
#JammuAndKashmir
நாடு மிக மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது
நாடு மிக மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது
நாடு மிக மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது சக மனிதனை மிக கீழ்த்தரமாக பேச முடிகிறது! தொட்டால் தீட்டென்று தீண்டாமையை உயர்த்தி பிடிப்பது தவறென்று அறிந்தும் சட்டரீதியாக தண்டிக்க கூடிய செயல் என்று தெரிந்தும் வெளிப்படையாக பொதுவெளியில் மேடை போட்டு பேசிவிட்டு போகமுடிகிறது
உயர்ந்த ஜாதி நாங்களென மத்த மனுஷாள் எல்லாம் கீழானவர் ..மிருங்களிடம் உயர்ந்த ஜாதி இல்லையா கலப்பென்பது அசிங்கமென கதைத்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக நடமாட முடிகிறது
அவலநிலைக்கு தெரிந்தே நாமும் காரணம் ஆகிவிட்டோம்
வழக்கு பதிவு செய்ய கூட அரசு தயங்குகிற கேவலமான நிலை .. அத்திரவரதரை தரிசப்பவரை தொட்டு பிரசாதம் கொடுக்காதீரென நம்மிடம் பிச்சையெடுப்பவர் கூறுகிறார் இந்த அவலநிலைக்கு தெரிந்தே நாமும் காரணம் ஆகிவிட்டோம்,
இந்த ஆட்சியை விட்டுவைப்பது கூட பாவ செயல் மன்னிக்க முடியாதது தான் ஒரு கணம் நேர்மை நீதி வழியென்று பேசிக்கொண்டிராமல் அரசை வீழ்த்த வேண்டிய பெருங்கடமை நமக்கிருக்கிறது
ஒவ்வொன்றாய் இழந்து வரும் சூழலில் கடைசியில் மனிதரையே தரம்தாழ்த்தி பேசும் சூழ்நிலை உருவாகி வருவது ஆபத்தானது எந்த சமூகநீதிக்காக நம் பாட்டனும் அப்பனும் போராடினானோ அந்த நிலைக்கு நம்மை தள்ளிவிட அதிமுக அரசு முயல்கிறது இனியும் பொறுப்பதென்பது அரசியல் மடமை
ஹிந்து’ என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கௌதம்
வடநாட்டில் இதைவிட மோசமான சூழல் உருவாகி
நாடு எதை நோக்கி போகிறதென்று நடுநிலையாளர்கள் கவலைக் கொள்கிறார்கள்..
ஜெமட்டோ விவகாரம் சூடுபிடித்த நிலையில் இந்நிலையில், இது தொடர்பான விவாதம் நியூஸ் 24 தொலைக்காட்சியில் நடைபெற்றுள்ளது
அந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ‘ஹம் ஹிந்து’ என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கௌதமும் அழைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் நடுவில், ‘கலித்’ என்ற இஸ்லாமியத் தொகுப்பாளர் தோன்றி, குறிப்பிட்ட பகுதியைத் தொகுத்து வழங்கியுள்ளார்
அப்போது அஜய் கௌதம், இஸ்லாமியத் தொகுப்பாளரைத் தான் பார்க்க மாட்டேன் எனக் கூறி, இரு கண்களையும் கைகளால் மூடிக்கொண்டார்
அஜய் கௌதம் செயலுக்கு பதில் அளித்துள்ள “நியூஸ் 24” தொலைக்காட்சி
இந்த செயல் அதிர்ச்சியை அளித்திருக்கிறது இஸ்லாமியன் கையில் உணவருந்த மாட்டேன் என்ற செயலை விட கொடூரமான மனபான்மை இது
அஜய் கௌதம் செயலுக்கு பதில் அளித்துள்ள “நியூஸ் 24” தொலைக்காட்சியின் செய்தி அறையில், அஜய் கௌதம் கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்
பத்திரிகை நெறிமுறையின்படி இத்தகைய செயலை அனுமதித்து ஆதரவளித்து மேடை அளிக்க முடியாது. அஜய் கௌதமை இனிமேல் அழைப்பதில்லை என நியூஸ் 24 முடிவு செய்துள்ளது
நாம் செய்த தவறு குறிப்பாக எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையின்மை .. பதவி ஆசை எப்படியும் ஒருநாளாவது பிரதமர் பதவியில் அமர்ந்துவிட முடியாதா என்ற நப்பாசை இன்று இந்த நிலைக்கு காரணம்
தான்தோன்றித்தனமாக எடுத்தேன் கவிழ்த்தேனென சர்வாதிகாரமாக செயல்படுகிற அரசு ..ஒருவித பதட்டத்தோடு நாட்டை வைத்திருக்கிறது காஷ்மீரில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை படைகள் குவிக்கபட்டு அபாயகரமான சூழல் நிலவுகிறது காங்கிரஸ் எச்சரிக்கையை அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை
நம் அரசியல் தலைவர்களின் பேராசைகள் ஒற்றுமையையின்மை
யார் வரகூடாதென்ற தெளிவின்மை நாட்டை சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது
சமூகநீதி பேசி வந்த தமிழகத்திலும் மெல்ல ஊடுறுவும் பாசிசம்தன் கையில் முறுக்க தொடங்கியிருக்கிறது பினாமி ஆட்சியாளர்களை வைத்துக்கொண்டு எதை செய்தாலும்/பேசினாலும் சட்டத்தால் எதுவும் செய்திட முடியாது அதற்கான துணிவு அடிமை அரசிடமில்லை என்று எண்ணி துணிந்து செயல்படுகின்றனர்
இதற்கு விரைந்து முடிவுகட்டவேண்டிய கட்டாயம் பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது .. தவறவிட்டால் காலம் மன்னிக்காது .. இந்த நேரத்தில் கலைஞர் எனும் ஒற்றை மனிதனை எண்ணி வியக்கிறேன் .. தனியொருவனாய் படை நடத்தி பாசிசத்தை நெருங்கவிடமால் செய்ய பேராளுமையை எண்ணும் போது விழிகளில் நீர் கோர்க்கிறது .. #பெருந்தலைவ..
..
#பெருங்காவலன்_கலைஞர்..
..
ஆலஞ்சியார்
திமுக வின் NIA ஆதரவு-ஜனாப் ஜவாஹிருல்லா விளக்கம்
திமுக வின் NIA ஆதரவு-ஜனாப் ஜவாஹிருல்லா விளக்கம்
-திமுக வின் NIA ஆதரவு-திமுகவே அசந்து போகுமளவு புதிய விளக்கம் கொடுத்த ஜனாப் ஜவாஹிருல்லா.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட மமக தலைவர் ஜவாஹிருல்லா திமுகவின் NIA ஆதரவு நிலைபாட்டிற்கு புதிதாக விளக்கமளித்துள்ளார்
இல்லை, இல்லை, திமுக உறுப்பினர்கள் “கவனக்குறைவாக” NIAவுக்கை ஆதரவாக வாக்களித்துவிட்டார்கள் என திமுகவே கூறாத ஒரு புதிய விளக்கத்தை கூறியுள்ளார்.
மேலும் மான்புமிகு தளபதி மு.க ஸ்டாலினை ( ஜவாஹிருல்லா இப்படித்தான் கூறினார்) சந்தித்து NIA வின் விளைவுகளை பற்றி விரிவாக பேசியுள்ளோம்,அதை ஸ்டாலினும் எதிர்ப்பதாக கூறியுள்ளார் என்றும் கூறினார்
By Media today
மோடியால் இந்தியா ஏமாந்த கதை-மக்களுக்கு பட்டை நாமம்
மோடியால் இந்தியா ஏமாந்த கதை-மக்களுக்கு பட்டை நாமம்
-மோடியால் இந்தியா ஏமாந்த கதை முன்னது போலி வாக்குறுதி, பின்னது
போலி தேசிய வாதம் மொத்தத்தில் மக்களுக்கு பட்டை நாமம்
கடந்த 2014ம் ஆண்டில் போலியான வாக்குறுதிகளிலும், 2019ம் ஆண்டில் போலியான பெருமையிலும் இந்தியா ஏமாந்தது என்று கூறியுள்ளார் கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் பிரனாப் பர்தன்
2019ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி அடைந்த வெற்றி என்பது நிச்சயம் ஒரு சாதனைதான்
தனிப்பட்ட மனிதர் ஒருவரின் பிரச்சார யுக்தி மற்றும் பேச்சுத்திறன் (அவ்வப்போது விஷத்தை தோய்த்துப் பேசுவது) ஆகியவற்றுக்கு கிடைத்த வெற்றி என்றே எடுத்துக்கொண்டாலும், அவற்றில் வேறுபல துணை காரணிகளையும் கணக்கில்கொள்ள வேண்டும்
மோடிக்கு இருந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவானது, மற்ற தலைவர்களின் பிரச்சாரம் பெற்ற முக்கியத்துவம் மற்றும் கவனத்தைக் காட்டிலும், அவரின் பிரச்சாரம் மிக அதிக கவனமும் விளம்பரமும் பெற உதவியது.
மேலும், பல பிரபலமான பத்திரிகைகளை தமக்கு சாதகமாக மாற்றி வைத்திருந்ததால், அவர்கள் மோடியிடம் எந்தவித கடினமான கேள்வியையும் கேட்காமல் தவிர்த்து காப்பாற்றினர்.
மேலும், தொடர்ந்து ஊழலற்ற மனிதராகவே சித்தரிக்கப்பட்டார் மோடி அவரின் ஆட்சியில் இந்திய நன்மதிப்பு சர்வதேச அளவில் மிகவும் குறைந்தபோதும், வெளிநாடுகளில் இந்தியாவின் பெருமை ஓங்குகிறது என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு மோடியால் வெற்றிபெற முடிந்தது
மோடி ஆட்சியில் மோசமான வேலைவாய்ப்பின்மை
அவரின் ஆட்சியில் மோசமான வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில்துறை முடக்கம், வேளாண்மை சீர்கேடு போன்ற ஏராளமான அவலங்கள் நிறைந்திருந்தும், மக்களை தேசியவாதத்தின்பால் திருப்பி ஏமாற்ற முடிந்தது.
இந்திய அரசியல் சாசனத்தை புனித நூல் என்று கூறிய மோடி, அதை ஒருபோதும் மதித்ததில்லை. தனது முந்தைய 5 ஆண்டுகால ஆட்சியில் தொடர்ந்து அதனை பலவீனப்படுத்தவே செய்தார்
கடைசியாக, பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்கம் நடத்தியதாக சொல்லப்படும் புலவாமா தாக்குதல் மோடிக்கு பெரியளவில் கைகொடுத்தது.
ஆக, கடந்த 2014ம் ஆண்டில் இந்தியா போலி வாக்குறுதிகளால் மோ(ச)டியால் ஏமாந்தது என்றால், 2019ம் ஆண்டில் போலி தேசியவாதத்தால் ஏமாந்தது என்றுள்ளார் கட்டுரையாளர்
உலக வரலாற்றில் எங்கும் நடந்திடாத கரும்புள்ளி
உலக வரலாற்றில் எங்கும் நடந்திடாத கரும்புள்ளி
இந்தியாவின் ஜனநாயகத்தை பாசிச பாம்பு, தேர்தல் என்ற போர்வையில் விழுங்கிய நாள்
2019 லோக்சபா தேர்தல்தான் 30 ஆண்டுகளில் மிகவும் மோசமானது என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்
லோக்சபா தேர்தல் தொடர்பாக 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டாக இணைந்து தேர்தலில் நடந்த ஆபத்தான முரண்பாடுகள் குறித்து 20 பக்க விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
தேர்தலின் போது பாஜகவினரின் எந்த ஒரு தேர்தல் நடத்தை விதி மீறல்களையும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை. மோடி, அமித்ஷாவின் தேர்தல் விதிமீறல்களைப் பற்றி தேர்தல் ஆணையம் கவலைப்படவே இல்லை.
லோக்சபா தேர்தல் தேதியும் கூட மோடிக்காகவே தாமதமாக வெளியிடப்பட்டது
மோடி நலத்திட்ட உதவிகளை அறிவிக்கும் வரை தேர்தல் ஆணையம் காத்திருந்தது அபத்தமானதாகும்.
தேர்தல் ஆணையத்தின் உயரிய மரபுகள் சரிந்து போனது பெரும் கவலைக்குரியது. தேர்தலை 3 மாதங்களாக நடத்திய மக்கள் மனதில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சி சார்புடையதாக தேர்தல் ஆணையம் தம்மை வெளிப்படுத்திக் கொண்டது.
பிரதமர் மோடி மீதான எந்த ஒரு தேர்தல் புகார் குறித்தும் விசாரணையே நடத்தவில்லை தேர்தல் ஆணையம்
ஒவ்வொரு புகார் வந்த போதும் மோடி தேர்தல் விதிகளை மீறவே இல்லை என நற்சான்று பத்திரம்தான் கொடுத்தது தேர்தல் ஆணையம்.
சட்டவிரோத குடியேறிகளை வங்கக் கடலில் தூக்கி எறிவோம் என பாஜக தலைவர் அமித்ஷா பேசியதை தேர்தல் நடத்தை விதி மீறலாக கருதவில்லை
தேர்தல் ஆணையம் குட்டு வைத்த பின்னரே தமக்கான அதிகாரங்கள் இருக்கின்றன என்பதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்தது
பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்தியதற்காக முகமது மோசின் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது
அதே நேரத்தில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரது ஹெலிகாப்டர்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன
அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.